Nagaratharonline.com
 
காரைக்குடி - திருச்சி நான்கு வழிச்சாலையில் விபத்து தொடர்கிறது  Oct 3, 13
 
காரைக்குடி - திருச்சி நான்கு வழிச்சாலையில் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்வதால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
ரூ.309 கோடியில், திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 108 கி.மீ., தூரத்திற்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு வழங்கிய தடையின்மை சான்றை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால், 2011ம் ஆண்டு முடிக்க வேண்டிய பணிகள், தற்போது வரை முடிக்கப்படவில்லை.

காரைக்குடி லீடர்ஸ் பள்ளி அருகே, மானகிரி பகுதியிலும் வாகனங்கள் செல்லாத வகையில், புறவழிச்சாலையில் தடுப்பு வைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில், மத்திய அரசின், "பவர் கிரிட்' உள்ளது.
இந்த பவர் கிரிட்டுக்கு வரும், உயர் அழுத்த மின் கம்பிகள், இந்த ரோட்டை கடந்து தான் செல்கின்றன. ரோடு போடுவதற்கு முன்பு அமைக்கப்பட்ட, மின் கம்பிகள் என்பதால், தற்போது ரோட்டின் உயரத்தை கணக்கில் கொள்ளும்போது இவை தாழ்வாக செல்கின்றன.
திறக்கப்படாத ரோட்டின் தடுப்புகளை, அலட்சியப்படுத்தி வரும், கனரக வாகனங்கள், இந்த உயர் அழுத்த மின்கம்பியில் உரசி, அடிக்கடி விபத்தை சந்திக்கின்றன.