Nagaratharonline.com
 
அண்ணாமலை பல்கலை இணைவேந்தர் யார்?  Sep 25, 13
 
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தராக, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, தமிழக அரசு எடுத்துக் கொண்டது. பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக, எம்.ஏ.எம்.ராமசாமி செயல்பட்டு வந்தார்.

இச்சூழலில், இனிமேல், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இனிமேல், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகம் போல் செயல்படும். இவ்விபரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என, அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் உதயசந்திரன் தெரிவித்தார்.