Nagaratharonline.com
 
வெறிச்சோடிய சூரக்குடி மஞ்சுவிரட்டு திடல்  Jan 8, 10
 
கோர்ட் அனுமதி இல் லாததால், சிங்கம்புணரி அருகே மு .சூரக்குடி மஞ்சு விரட்டு நிறுத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகை மறுதினம் மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். ஆனால் இங்கு மட்டும், மார்கழி கடைசி வெள்ளிக்கிழமை நடக்கும். பல மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். கடந்த ஆண்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்தது. கோர்ட் கெடுபிடியால், இந்தஆண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மஞ்சுவிரட்டு இல்லை என கிராமத்தினர் அறிவித்தனர். நேற்று காலை இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், களஞ்சியம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 12 மணிக்கு செகுட்டு அய்யனார் கோயில் காளை மட்டும், அலங்கரித்து தொழுவத் திற்கு கொண்டு வரப்பட் டது. அதை அவிழ்த்து விடாமல், கயிற்றுடன் வெளியில் கொண்டு சென்றனர். ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான காளைகள், காளையர்கள் சந்திக்கும் மஞ்சுவிரட்டு திடல், நேற்று வெறிச்சோடியது.

source : Dinamalar