Nagaratharonline.com
 
காரைக்குடியில் "அல்ட்ரா'-வுக்கு பதில் "ஆர்டினரி' பஸ் பயணிகளை ஏமாற்றியதால் முற்றுகை  Sep 11, 13
 
காரைக்குடியில் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு செல்லும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்காக, 50க்கும் மேற்பட்ட பயணிகள் ரூ.330 கொடுத்து முன்பதிவு செய்திருந்தனர். சாதாரண பஸ்சுக்குரிய கட்டணம் ரூ.245. ஆனால், 8.30 மணிக்கு வரவேண்டிய, அல்ட்ரா டீலக்ஸ் பஸ் வரவில்லை.அதற்கு பதிலாக, சிவகாசி செல்லும் (டி.என்.63 1396) சாதாரண பஸ்சில், சென்னை என போர்டை மட்டும் மாற்றி, அந்த பஸ்சில் பயணிகளை, ஏற சொன்னார்கள். "அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்சுக்கு பதில், சாதாரண பஸ்சை அனுப்பியதால், பயணிகள் அதில் ஏற மறுத்ததுடன், டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து கழக மேலாளர் ஆதப்பனை,முற்றுகையிட்டு வேறு "அல்ட்ரா டீலக்ஸ் பஸ்' அனுப்பும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாதாரண பஸ்சுக்குரிய கட்டணம் மட்டும் பெறப்பட்டு, 10.15 மணிக்கு சாதாரண பஸ் சென்னை கிளம்பியது.