Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் குரங்கு தொல்லை: மக்கள் அவதி  Jan 8, 10
 
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் குரங்கு தொல்லையால், மக்கள் அச்சம் அடைந் துள்ளனர்.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. பூட்டிக்கிடக்கும் பழைய வீடுகளில் வசிக்கும் இவை, பகலில் மற்ற வீடுகளுக்குள் புகுந்து உணவுவை, பாத்திரத்துடன் எடுத்து சென்று விடுகின்றன. வெளியில் சென்று விட்டு, வீட்டு சாப்பிட வருவோர் இதனால் ஏமாற்றம் அடைகின்றனர். அங்குள்ள பள்ளிகளில் ஓடுகளை பிரித்து உள்ளே சென்று, மாணவர்களின் உணவையும் கபளீகரம் செய்கின்றன. புத்தக பைகளையும் தூக்கி செல்கின்றன.
கடை வைத்திருப்போர், சற்று அசந்தால் வாழைப்பழம், பிஸ்கட், வடை போன்றவை "அபேஸ்' ஆகி விடும். குரங்கு தொல்லையால் வீடுகளில் சிறிய பொருட்களை வைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். கண்ணுடைய நாயகி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், பூஜை பொருட்களையும் பிடுங்கி சென்று விடுகின்றன. குரங்குகளை பிடிக்க பேரூராட்சி, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar