Nagaratharonline.com
 
திருநாகேஸ்வரம் ராகுபகவானுக்கு தங்கமுலாம் கவசம்  Sep 1, 13
 
 
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீராகுபகவான் உற்சவ மூர்த்திக்கு ரூ. 3 லட்சத்தில் தங்கமுலாம் பூசிய கவசத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

நவக்கிரகங்களில் ராகுதலமாகத் திகழும் இந்தக் கோவிலில் ராகுபகவான் நாக கன்னி, நாகவள்ளி இரு கன்னிகையுடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். மூலவர் நாகநாதபெருமானின் பிரகாரத்தில் ராகுபகவான் உத்சவர் சன்னதி உள்ளது.