Nagaratharonline.com
 
மக்கள் அடையாள அட்டை பெறுவது எப்படி ?  Jan 7, 10
 
பதினெட்டு வயதான (படிக்கத் தெரிந்த வர்களுக்கு மட்டுமே என்ற விதிமுறை உண்டு.) இந்தியக் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது இந்தத் திட்டம் சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமில்லாமல், கோவை, திருச்சி, மதுரை, வேலூர், காஞ்சீ புரம், விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் புதுவையிலும் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களின் தலைநகரப் பகுதி களிலிருந்து படிப்படியாக மற்ற ஊர்களுக்கும் விஸ்தரிக்கப்படும்.

எல்லா அஞ்சல் அலுவலகங் களிலும் விண்ணப்பப் படிவங் கள் பத்து ரூபாய்க்கு விற்கப்படு கின்றன. அடையாள அட்டைக்கான கட்டணம் இருநூற்று நாற்பது ரூபாய். விண் ணப்பத்தில் உங்களுடைய புகைப்படத்தை ஒட்டி பெயர், தந்தை/கணவர்/காப்பாளர் பெயர், பிறந்த தேதி, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, அலுவலக முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் துறையில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள்தான் உங்களது வீடு தேடி வருவார்கள். விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து, வசிப்பிட அடையாள அட்டை வழங்க சிபாரிசு செய்வார்கள்.

விண்ணப்பம் கொடுக்கிறபோதோ, அல்லது தொலைபேசி மூலமோ நீங்கள் எப்போது இருப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டு, தான் வருவது பற்றிய தகவல்களைச் சொல்லாமல், நீங்கள் வீட்டில் இருக்கும்போது வந்து விசாரிப்பார். அப்போது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை நீங்கள் அவரிடம் காட்ட வேண்டும். பல்தரப்பு விசாரணையின் மூலமாக உங்களது வசிப்பிடத்தையும், உங்களைப் பற்றிய விவரங்களையும் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே உங்களுக்கு வசிப்பிட அடையாள அட்டை வழங்க சிபாரிசு செய்வார்.


source : mangayar Malar