Nagaratharonline.com
 
பாகனேரி மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி,பால் குட விழா  Aug 23, 13
 
பாகனேரி மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி,பால் குட விழா நடைபெற்றது.

காப்புக்கட்டுடன் விழா தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,அபிஷேகம் நடைபெற்றது.இரவு அம்மன் மின் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் கரகம் எடுத்து பூக்குழி இறங்கினர். கரகம்,முளைப்பாரி கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து புல்வநாயகியம்மன் கோவில் குளத்தில் கரைக்கப்பட்டது.