Nagaratharonline.com
 
பொன்னமராவதி பகுதியில் பொதுமக்களுக்கு உணவாகும் ஈசல்  Aug 21, 13
 
பொன்னமராவதி பகுதியில் பெய்து வரும் மழையை அடுத்து மண் புற்றுகளில் இருந்து வெளிவரும் ஈசல்களை உணவுக்காகப் பிடிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொன்னமராவதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஈசல்கள் அதன் புற்றிலிருந்து வெளியே வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு வெளியில் வரும் ஈசல்களை இந்தப் பகுதி மக்கள் பிடித்தும், வயல்வெளிகளில் கிழே கிடக்கும் ஈசல்களை எடுத்தும் வெய்யிலில் காயவைக்கின்றனர்.

பிறகு அதன் சிரகுகளை எடுத்துவிட்டு அதனுடன் வெல்லம், பச்சரிசி ஆகியவற்றை சேர்த்து இறைவனுக்கு படைத்துவிட்டு பின்னர் அதை உணவாக உட்கொள்கின்றனர். இதுகுறித்து பிடாரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பாக்யராஜ் கூறியது:

மழைக்காலத்தில் இவ்வாறு ஈசல்களைப் பிடித்து படைத்து உண்பது இந்தப் பகுதி மக்களின் தெய்வ நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஈசல்களை உண்பது உடலுக்கு நல்லது என்றும், ஈசல் புற்றிலிருந்து வெளியில் வந்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது என்றார் அவர்.