Nagaratharonline.com
 
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி  Aug 21, 13
 
அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தின் போது ரூபாயின் மதிப்பு ரூ.64.45 ஆக சரிந்தது.

இறக்குமதியாளர்களுக்கும், வங்கிகளுக்கும் டாலரின் தேவை அதிகரித்ததே ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்ததற்கு முக்கியக் காரணம். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.

பவுண்டுக்கு நிகரான மதிப்பு ரூ.101.3: பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது.