Nagaratharonline.com
 
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம்  Aug 13, 13
 
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோவில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோவிலில் கடந்த 4ம்தேதி காப்புக் கட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவில் முன்பு புறப்பட்ட தேர் கோவிலை வலம் வந்து நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.