Nagaratharonline.com
 
பாஸ் உண்டு - பஸ் வசதி குறைவு : பாகனேரி மாணவர்கள் தவிப்பு  Aug 4, 13
 
பாகனேரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் இருந்தும், கூடுதல் பஸ் வசதியின்றி பணம் கொடுத்து கல்லலுக்கு செல்லவேண்டியுள்ளது.

பாகனேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்லலுக்கு படிக்க செல்கின்றனர். காரைக்குடியிலிருந்து கல்லல்,முத்துப்பட்டி வழியாக பாகனேரிக்கு மாலை ஒரு தடவை மட்டும் 6 "பி' பஸ் செல்கிறது. காலையில் மாணவர்கள் செல்வதற்கு பஸ் பாஸ் வசதியிருந்தும் இந்த ஒரு பஸ் தவிர, கூடுதல் பஸ் வசதியின்றி, பணம் கொடுத்து மினி பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் செல்லவேண்டியுள்ளது. மாலையில் இயக்கப்படும் காரைக்குடி- பாகனேரி டவுன் பஸ்சை காலையில் பள்ளி நேரத்தை கணக்கீட்டு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.