Nagaratharonline.com
 
திருப்புத்தூர் துணை அஞ்சல் அலுவலகத்தில் ரயில்வே முன்பதிவு வசதி  Jun 20, 13
 
பயணிகளின் வசதிக்காக திருப்புத்தூர் துணை அஞ்சலக அலுவலகத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை, மானாமதுரைக்குச் சென்று முன்பதிவு மேற்கொள்வதை விடுத்து திருப்புத்தூரிலேயே முன்பதிவினை மேற்கொள்ளலாம்.

எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.