Nagaratharonline.com
 
பாஸ்போர்ட் விசாரணை : லஞ்சம் வாங்கிய 2 போலீசார் கைது  Jan 6, 10
 
திருப்புத்தூர் அருகே புழுதிப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவரின் விசாரணைக்கு ரூ 500 லஞ்சம் வாங்கியதாக இரு போலீசாரைக் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். புழுதிப்பட்டியைச் சேர்ந்த பெரியப்பா மகன் அன்பரசு. இவர் வெளிநாடு செல்வதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து அன்பரசு குறித்து போலீஸ் விசாரணை அறிக்கை கேட்டு புழுதிப்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு மதுரை அலுவலகத்திலிருந்து வந்தது. இதனையடுத்து புழுதிப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக உள்ள ராஜகோபால்(50) மற்றும் போலீஸ் ஜெயக்குமார் (35) ஆகியோர் அன்பரசிடம் விசாரணையை நல்ல விதமாக எழுதி அனுப்ப போட்டோவுடன் ரூ 500 பணமும் கேட்டனர். இது குறித்து அன்பரசு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமாரசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், ஏட்டுக்கள் மகேந்திரராஜன், மைக்கேல்,கருப்பணசாமி உள்ளிட்ட குழுவினர் புழுதிப்பட்டி சென்றனர். அன்பரசிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்தனுப்பினர். நேற்று இரவு 8.30 மணிக்கு போலீஸ் ஸ்டேசன் சென்ற அன்பரசு பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்தார். ஜெயக்குமார் பணத்தை ராஜகோபாலிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தன

source : Dinamalar