Nagaratharonline.com
 
விலை உயர்வால் செட்டிநாடு காட்டனுக்கு குறைந்தது மவுசு  Jun 17, 13
 
விலை உயர்வால் செட்டிநாட்டு காட்டன் சேலைகளை நேரடியாக வாங்க வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
காரைக்குடி பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட தறிகள் உள்ளன. இங்கு செட்டிநாடு காட்டன் சேலை நெய்யப்படுகிறது.ஒரு சேலை நெசவுக்கு ஏற்கனவே ரூ.212.50 கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்போது 10 சதவீத கூலி உயர்த்தப்பட்டு, 233.70 ஆக வழங்கப்படுகிறது. நெசவு செய்யப்படும் சேலைகள்,கோ.ஆப்டெக்ஸ்-க்கு 20 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் மூலம், நெசவாளர் சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்த பணம் வந்து சேர குறைந்தது ஆறு மாதங்களாகும். ரிபேட் எனப்படும், 20 சதவீத தள்ளுபடி மானியம், லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளது. நெசவாளர் சங்கங்கள், நேரடியாக சேலைகளை வியாபாரிகளுக்கு அவ்வப்போது, விற்று வருகின்றன. பணம் உடனடியாக கிடைப்பதால், பணப்பட்டுவாடா சிக்கல் இல்லாமல் இருந்தது.

தற்போது சேலையின் விலையில் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே ரூ.547 ரூபாய்க்கு விற்ற சேலை தற்போது, 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தால், கூட்டுறவு சங்கங்களை நாடி வந்து வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.