Nagaratharonline.com
 
வேகுப்பட்டியில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்  Jun 15, 13
 
வேகுப்பட்டி ஊராட்சியில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் பொ. அன்பையன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் அபிராமி ராமநாதன் முன்னிலை வகித்தார்.

முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவை தொடர்பாக 67 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

முன்னதாக, ஊராட்சி துணைத் தலைவர் பெரி. முத்து வரவேற்றார்.