Nagaratharonline.com
 
குறைந்தழுத்த மின்சாரம் சப்ளை : பாகனேரியில் பாதிப்பு அதிகம்  Jun 5, 13
 
பாகனேரியில் தொடர்ந்து குறைந்தழுத்த மின்சாரம் சப்ளையாவதால் எலக்ட்ரிக்,எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதடைகிறது.பாகனேரியில் 1500 மின் இணைப்புகள் உள்ளது. மூன்று டிரான்ஸ்பார்மர்கள் செயல்படுகிறது. ஒரு டிரான்ஸ்பார்மர் குறைந்த அளவு திறன் கொண்டது.இங்குள்ள மின் இணைப்புகளுக்கு குறைந்தது 5 டிரான்ஸ்பார்மர் இருக்க வேண்டும்.

குறைந்தளவு திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களால் அனைத்து வீடுகளிலும் குறைந்த மின் அழுத்தம் வருவதால் மோட்டார்கள்,மின் விசிகள்,கிரைண்டர்,மிக்ஸி, குளிர்சாதனபெட்டிகள் போன்றவை இயங்குவதில்லை. தொடர்ந்து ரிப்பேராகி வருகிறது.