Nagaratharonline.com
 
NEWS REPORT: கோவை - மன்னார்குடி செம்மொழி விரைவு ரயில் 12 முதல் இயக்கம்  Jun 5, 13
 
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மன்னார்குடி - கோவை செம்மொழி விரைவு ரயில் (எண்: 16615), மன்னார்குடியில் இருந்து வரும் 11-ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோவை வந்தடையும்.

மறுமார்க்கமாக கோவையில் இருந்து 12-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 16616) மறுநாள் காலை 7.55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.

செம்மொழி விரைவு ரயில் வரும் 12-ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்படுகிறது.