Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை-காரைக்குடி சிலம்பு எக்ஸ்பிரஸ் ஜூன் 22 முதல் இயக்கம்  May 30, 13
 
சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு இரு முறையாக, சென்னை- காரைக்குடி இடையே இரு மார்க்கங்களிலும் ஜூன் 22 ந் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே நிலைக்குழுத் தலைவரான திமுக எம்.பி டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமை இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு வந்து சேரும்.

காரைக்குடியிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.