Nagaratharonline.com
 
கொடைக்கானல் : மூட்டுவலித் தைலம் விற்பனைக்குத் தடை  May 23, 13
 
கொடைக்கானலில் வின்டர் கிரீன் மூட்டுவலித் தைலம் விற்பனை செய்ய மாநில நுகர்வோர் ஆணையம் தடை விதித்தது.

தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் கே. மணவாளன் தாக்கல் செய்த மனுவில், வின்டர் கிரீன் மூட்டுவலித் தைல பாட்டில்களில் சட்டப்படி குறிப்பிட வேண்டிய விவரங்கள் இடம் பெறவில்லை. மலைப்பிரதேசம் முழுவதும் பரவலாக இதை விற்கிறார்கள். இது விஷத்தன்மை நிறைந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கூடுதலாகப் பயன்படுத்தினால் இறப்பு ஏற்பட்டுவிடும். மரணம் ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய மருத்துவ வசதியும் இல்லை. தற்போது கொடைக்கானலில் சீசன் என்பதால் அதிக அளவில் இதை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே வின்டர் கிரீன் தைலம் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரித்த நுகர்வோர் ஆணைய மதுரை கிளைத் தலைவர் ஆர். ரகுபதி, விண்டர் கிரீன் தைல பாட்டில்கள் அனைத்தையும் 2 வாரங்களில் பறிமுதல் செய்யுமாறு நகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.