Nagaratharonline.com
 
காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் தேரோட்டம்  May 19, 13
 
காரைக்குடி அருள்மிகு கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை (மே 21) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

கிராம தேவதையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மனுக்கு செவ்வாய்ப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் நடை பெறுவது வழக்கம்.

செவ்வாய்க்கிழமையன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை 5 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து அம்மன் முக்கிய வீதிகள் வழியாக காட்டமன் கோயிலை சென்றடைகிறார். அங்கு அம்மனுக்கு வரவேற்பு மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.

வியாழக்கிழமை காலை திருத்தேர் மீண்டும் கோயிலுக்குத் திரும்பும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று இரவு 11 மணிக்கு அம்மன் தெப்பத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.