Nagaratharonline.com
 
மதகுபட்டியை புதிய தாலுகாவாக மாற்றக் கோரி உண்ணாவிரதம்  Jan 4, 10
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதகுப்பட்டி ஊராட்சி, பெருங்குடி ஊராட்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மதகுப்பட்டி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தை, சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகையில், இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் கோரிக்கையை எழுப்புகிறேன் என்றார்.

உண்ணாவிரதத்தில், மதகுப்பட்டி மற்றும் பெருங்குடி ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். மதகுப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மதகுப்பட்டி சித்த மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். மதகுப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், முன்னாள் பெருங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் என். முருகேசன் செல்வி, ஐடிஐ தலைவர் எ.பி. வைரவன், மதகுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம்ஜிஆர் என்ற வைரவன், துணைத் தலைவர் ஆர்.எம். நாராயணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

source ; dinamani 05/01/2010