Nagaratharonline.com
 
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி  May 9, 13
 
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 22 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர் சி. யாசிக் 1082 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் வி.எஸ்.டி. வள்ளியம்மை, இயக்குவர் வி.எஸ்.டி. ராஜா, முதல்வர் வெ. முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.