Nagaratharonline.com
 
பாகனேரியில் தொன்மை வாய்ந்த சிவலிங்கம் சிலை  May 3, 13
 
பாகனேரியில் தொன்மை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பாகனேரி, பெருங்குடி தெற்கு பகுதியில், ஓட்டக்கோவில் முனியய்யா கோவில் உள்ளது. இதன் அருகே, பெண்கள் யாரும் செல்லக் கூடாது என்பது ஐதீகம். முனியய்யா கோவில் தெற்கு புறத்தில் இருந்து, 100 மீட்டரில், அடர்ந்த வனப்பகுதியில், நுட்பமான வேலைப்பாடுகளுடன், சிவலிங்கம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. இதைச் சுற்றி கோவில் இருந்ததற்கான, செங்கல் கட்டுமானங்கள் உள்ளன.சிலையை தட்டினால், உலோகத்தில் இருந்து எழும் ஒலி கேட்கிறது. இது குறித்து, தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.