Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சி,நெற்குப்பை, கண்டவராயன்பட்டி கூட்டுறவுச்சங்கங்களில் போட்டியின்றி இயக்குநர்  Apr 17, 13
 
திருப்புத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்,தெக்கூரில் மட்டும் நாளை தேர்தல் நடக்கிறது.மற்ற சங்கங்களில் போட்டியின்றி தேர்வாயினர்.வேட்பு மனுத் தாக்கலின் போது, புதுப்பட்டி, தென்மாப்பட்டு,கண்டவராயன்பட்டி,திருக்கோளக்குடி, பூலாங்குறிச்சி,நெற்குப்பை, திருக்களாப்பட்டி, வேலங்குடி சங்கங்களில் போட்டியின்றி 11 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த சங்கங்களுக்கு நடைபெற்ற தலைவர்,துணைத் தலைவர் தேர்தலிலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.மூன்றாம் கட்டமாக திருக்கோஷ்டியூர், கீழச்சிவல்பட்டி, தெக்கூர் சங்கங்களுக்கு நடந்த வேட்பு மனுத் தாக்கலில் திருக்கோஷ்டியூர்,கீழச்சிவல்பட்டி சங்கங்களில் இயக்குநர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தெக்கூரில் மட்டும் அ.தி.மு.க.,வினர் இரு தரப்பாக போட்டியிடுகின்றனர்.11 இயக்குநர்களுக்கு இருதரப்பினர் உள்ளிட்ட 24 பேர் போட்டியில் உள்ளனர்.ஏப்.,19ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது.