Nagaratharonline.com
 
காரைக்குடியில் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்  Apr 16, 13
 
காரைக்குடியில், பழைய பஸ் ஸ்டாண்ட்டிலுள்ள கூல்டிரிங்ஸ் கடையை உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு மேற்கொண்டதில், அப்போது, கடையின் உள்ளே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான, குளிர்பானங்கள் காலவாதியான நிலையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மூன்று மாதம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய குளிர்பானங்கள், ஓராண்டு ஆன நிலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது

ஒரே ஒரு கடையில் ரெய்டு மேற்கொண்டபோதே, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குளிர்பானங்கள் சிக்கின. காரைக்குடி முழுவதும் ரெய்டு மேற்கொண்டால், ரூ.பல லட்சம் காலாவதியான பொருட்கள் சிக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?