Nagaratharonline.com
 
நேமத்தான்பட்டி : வீட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு, இன்வெர்ட்டரும் தப்பவில்லை  Apr 11, 13
 
காரைக்குடி நேமத்தான்பட்டி அப்பர் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம்,82. இவர் கடந்த 9ம் தேதி இரவு, 8 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன், சென்னையில் உறவினர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார்.

அவர்கள் சென்ற நேரத்தில், வீட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டினுள் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், பேன், மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், 600 வாட்ஸ் இன்வெர்ட்டர், பேட்டரி,ரூ.20 ஆயிரம் என ரூ.2 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று காலை வீடு திறந்து கிடப்பதை பார்த்த, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவரது மகன் சோலையப்பனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் புகாரின் பேரில், செட்டிநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.