Nagaratharonline.com
 
இனிமேல் ‘‘ஜருகண்டி.... ஜருகண்டி’’ கிடையாது திருப்பதியில் பக்தர்களை மரியாதையுடன் ஒழுங்குபடுத்  Apr 9, 13
 
திருமலை– திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கனுமூரி பாபிராஜு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் நேரடியாக சென்று, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களின் நடவடிக்கைகளை பார்வையிட்டார். பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்லும்போது அவர்களை பிடித்து தள்ளாமல் ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள கோவில் துணை அதிகாரி ரமணாவிடம் சில யோசனைகளை கூறினார்.

பெண் பக்தர்களை ஒழுங்குபடுத்த பெண் ஊழியர்களையும், ஆண் பக்தர்களை ஒழுங்குபடுத்த ஆண் ஊழியர்களையும் நியமிக்க அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டார். சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் மேல் கை வைத்து ‘‘ஜருகண்டி.. ஜருகண்டி’’ என்று கூறி தள்ளி விடாமல் ‘‘கோவிந்தா.. கோவிந்தா..’’ என கூறி மரியாதையுடன் வெளியே அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என கோவில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.