Nagaratharonline.com
 
இலவசமாக ஏ.சி., ஃபிரிட்ஜ் பயிற்சி பெற அழைப்பு  Apr 2, 13
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு மையம் மூலம் அளிக்கப்படும் ஏர்கண்டிஷன், ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் பயிற்சி பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள் இம்மாதம் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த பயிற்சி மைய செய்திக் குறிப்பு: இந்த மையம் சார்பில் சுய வேலைவாய்ப்க்கான பயிற்சிகள் இலவசமாக வழகப்படுகிறது.

இதில், ஏர்கண்டிஷன், ஃபிரிட்ஜ் பழுது நீக்குதல் மற்றும் பராமரித்தல் பயிற்சி 30 நாள்கள் நடைபெறவுள்ளது. 18 முதல் 35 வரை உள்ள இளைஞர்கள் கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் ஏப்.13-க்குள் நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிராமிய சுயதொழில் பயிற்சி நிறுவனம், 1506-2 மேல நான்காம் வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை-622 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புக்கு: 04322-225 339. பயிற்சி காலத்தில் உணவு, பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.