Nagaratharonline.com
 
இடியும் நிலையில் பாகனேரி நூலகம்  Mar 30, 13
 
பாகனேரியில்,இடியும் நிலையில் உள்ள அரசு நூலகத்தால்,வாசகர்கள் அச்சத்தில் உள்ளனர்.கடந்த 40 ஆண்டுக்கு முன், தனி நபர் ஒருவரால் துவங்கிய இந்நூலகம் அரசுடமையாக்கப்பட்டு, செயல்படுகிறது. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களும்,100 ஆண்டுக்கு முன், வெளியான நூல்களின் முதல் பதிப்புகளும் இடம் பெற்றுள்ளன

இந்நூலகத்திற்கென கடந்த 20 ஆண்டுக்கு முன்பு,இரு கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒன்று வாசகர்களுக்கும் மற்றொன்று நூல்கள் வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இரு கட்டடத்திலும் நீர் கசிவு ஏற்பட்டு, சேதமடைந்துள்ளன. இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், வாசகர்கள் உள்ளே வர அஞ்சுகின்ற னர். ஆராய்ச்சிகளுக்கு பயன்படும் நூல்கள், மூட்டைகளாக கட்டிப்போட்டுள்ளதால் கரையான் அரிக்கும் நிலை உள்ளது. பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய இந் நூலகத்தின் கட்டடங்கள் இடிந்து விழுவதற்குள் சீரமைக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.