Nagaratharonline.com
 
மாண்டிசோரி கல்வி முறை தன்னம்பிக்கையை வளர்க்கும் : மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்  Feb 13, 13
 
தேவகோட்டை லோட்டஸ் ஏ.என்.வெங்கடாச்சலம் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கோவிலூர் ஆதீனம் பேசியது:

மாண்டிசோரி கல்வி முறைக்கும், கின்டர்கார்டன் கல்விக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. மாண்டிசோரி கல்விமுறையில் சீருடை, நோட்டுப்புத்தகம், பென்சில், பேனா இல்லை. வீட்டிற்கு சென்றதும் வீட்டுப்பயிற்சி கிடையாது.

மேலும் இந்த பயிற்சி மேற்கொள்வதால் குழந்தைகள் தவறாகச் செய்து பின்னர் அதை சரியாக செய்து பழகிவிடுவார்கள். குறிப்பாக தன்னம்பிக்கையை வளர்க்க இந்த கல்வி முறை உதவும்.

இன்று நம்மவரிடையே தவறான நம்பிக்கை ஒன்று உள்ளது. அதிக சம்பளம் கொடுத்துப் பயிலும் கல்வி நிறுவனங்கள்தான் நன்றாக சொல்லிக்கொடுப்பார்கள் என நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.

இதுபோன்ற கல்வி நிறுவனங்களால்தான் சாதாரண, நடுத்தர மக்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க இயலும் என்றார் மெய்யப்ப ஞானதேசிய சுவாமிகள்.

முன்னதாக நகரத்தார் பள்ளிகளின் செயலர் ராமநாதன் வரவேற்றார்