Nagaratharonline.com
 
தேவகோட்டையில் நான்கு தலைமுறைகுடும்பத்தினர் 31 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு  Jan 15, 13
 
தேவகோட்டையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தலைமுறையினர், பாரம்பரிய பங்களாவில் நேற்று பொங்கல் வைத்து பரஸ்பர நலன் விசாரித்தனர்.

தேவகோட்டை சிவரக்கோட்டையார் வீதியில் அ.க.ந., செட்டியார் பங்களா உள்ளன. இந்த பங்களா 108 ஆண்டுகள் பழமையானது. இவ்வீட்டை பூர்வீகமாக கொண்ட 4 தலைமுறையின் சகோதரர்கள் 50 பேர், 31 ஆண்டுகளுக்கு பின் நேற்று பொங்கல் அன்று ஒன்று கூடினர்.

இந்த தலைமுறை குடும்பத்திலேயே மூத்தவரான இந்தியன் வங்கி (ஓய்வு) மண்டல மேலாளர் செந்தில்நாதன் செட்டியார் தலைமை, அனைவரும் இங்கு சந்தித்தனர். அனைவரும் ஒன்று கூடி, நேற்று தை பொங்கலை முன்னிட்டு, பாரம்பரிய பூர்வீக பங்களாவில், பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இதற்காக, இக்குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஒரே வித சேலை, வேட்டி சட்டைகள் உடுத்தியிருந்தனர்.

அக்குடும்பத்தின் 2வது தலைமுறை வாரிசான டாக்டர் வீரப்பன் கூறியதாவது: 31 ஆண்டுகளுக்கு பின், அனைவரும் சந்தித்துள்ளோம். எங்களுக்கு மிகுந்த மகிச்சி. எங்கள் தந்தை வீரப்பன்,1947ல் எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர். அதை தொடர்ந்து, நானும், என் சகோதரியும் டாக்டர்கள். எங்கள் குடும்பத்தினர் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இது தவிர சாப்ட்வேர் நிறுவனங்களில் உள்ளனர். 108 ஆண்டுகள் பழமையான இந்த பங்களாவை, ரூ.15 லட்சம் செலவில் புதுப்பித்தோம். இது எங்கள் வீட்டின் ஆனந்த பொங்கல், என்றார்.