Nagaratharonline.com
 
பி.இ பட்டதாரிகளுக்கு Hindustan Petroleum நிறுவனத்தில் வேலை  Jan 14, 13
 
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள்: 250

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் 2013 தேர்வு எழுத உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: ரூ.24,900 - 50,500

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.