Nagaratharonline.com
 
மியான்மரிலிருந்து திரும்பியவர்கள் மீண்டும் அங்கு தொழில் துவங்க ஏற்பாடு  Jan 11, 13
 
இரண்டாம் உலகப்போர் பாதிப்பால் பர்மாவில் (மியான்மர்) நிலங்களை விட்டுத் திரும்பிய தமிழர்கள் மீண்டும் அங்கு தொழில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

1942-ல் பர்மா சுதந்திரம் அடைந்தபிறகு கைப்பற்றப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அங்கு அடிக்கடி ஏற்பட்ட ராணுவ ஆட்சியால் நிலங்களை மீட்பதற்கான வாய்ப்பு இல்லாமல் தமிழர்கள் அதனை இழந்திருந்தனர்.

குன்றக்குடியில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு மியான்மரில் உள்ள நிலங்களை திரும்பப்பெற பேராசிரியர் அழகப்பன் தலைமையில், ஒரு குழு பர்மா சென்று வந்தது.

இதுதொடர்பாக இந்திய அரசு மியான்மர் அரசுடன் பேசி தோட்டத்தொழில் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.