Nagaratharonline.com
 
ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு மூன்று கால வழிபாடு துவங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழா  Dec 30, 12
 
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக்கழகம் சார்பில் 1813 முதல் ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு மூன்றுகால வழிபாடு துவங்கி 2013 வரையில் 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, காரைக்குடி கம்பன் மணிமண்ட பத்தில் அதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில்,முன்னாள் இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் AR.லெட்சுமணன் தலைமைவகித்துப் பேசினார். முருகப்பா குழுமம் தொழிலதிபர் M.V சுப்பையா செட்டியார் விழாவை தொடக்கிவைத்துப் பேசினார். ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக் கழகத் தலைவர் CT.S சிதம்பரம் செட்டியார் முன்னிலை வகித்தார். செயலாளர் (பொறுப்பு) முத்துபழனியப்பன் உரையாற்றினார்.

கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். பேராசிரியர் கண. சிற்சபேசன், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் சோம. வள்ளியப்பன், சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா ஆகியோர் பேசினர்.

விழாவில், முன்னாள், இந்நாள் நிர்வாகிகளை நீதியரசர் AR.லெட்சுமணனும், 200-வது ஆண்டு விழாக்குழுவினரை தொழிலதிபர் M.V. சுப்பையா செட்டியாரும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.

துவக்க விழாவில், முன்னதாக விழாக்குழுத் தலைவர் R.சேக்கப்பச்செட்டியார் வரவேற்றார். ஸ்ரீ காசிநாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக் கழக பொருளாளர் RM.வயிரவன் நன்றி கூறினார்.

பிற்பகலில் மகளிர் அரங்கமும், மாலையில் கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்தும் நகரத்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.