Nagaratharonline.com
 
அடையாள அட்டை கேட்டு ரயில்வே அடம் : எட்டாக்கனியாக மாறும் ரயில் பயணம்  Dec 3, 12
 
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகள், அசல் அடையாள ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள், "பான்' அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கிரெடிட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், சேமிப்புக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை போன்றவற்றில், ஏதாவது ஒன்றின் அசல் ஆவணத்தை, தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை எனில், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

டிக்கெட் வாங்கும் பெரும்பாலான பயணிகள், டிக்கெட்டில் உள்ள அனைத்து விவரங்களையும், பொதுவாக படித்து பார்ப்பது இல்லை. தாங்கள் செல்ல வேண்டிய ஊரின் பெயர், தேதி, வண்டியின் பெயர் போன்ற, ஒருசில விவரங்களை மட்டுமே பார்க்கின்றனர்.முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் கவுன்டரில் உள்ள ஊழியர்களும் இதுகுறித்து, பயணிகளுக்கு எடுத்துக் கூறுவது இல்லை. அறிவிப்பு விளம்பரங்களும், முன்பதிவு மையங்களில் வைக்கப்பட வில்லை.