Nagaratharonline.com
 
சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் மரணம்  Nov 29, 12
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்னாள் தக்கார் வி.என்.சிதம்பரம் (வயது76). மதுரை சின்னசொக்கி குளத்தில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த வி.என்.சிதம்பரத்துக்கு சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வி.என்.சிதம்பரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு கமலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மரணமடைந்த வி.என்.சிதம்பரம் செட்டியாரின் சொந்த ஊர் புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த ராங்கியம் என்ற கிராமம் ஆகும்.

சென்னை கமலா தியேட்டர் அதிபரான சிதம்பரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் தூங்காநகரம் படத்தில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

வி.என்.சிதம்பரம் மரணமடைந்த செய்தி கேட்டு அவரது நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் வி.என்.சிதம் பரத்தின் உடல் இன்று காலை மதுரையிலிருந்து சொந்த ஊரான ராங்கியத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நாளை (ஞாயிற்றுக் கிழமை) உடல் தகனம் செய்யப்படுகிறது.