Nagaratharonline.com
 
தேவகோட்டை பள்ளி மாணவர்கள் தயாரித்த சூரிய அடுப்பு  Nov 17, 12
 
தேவகோட்டை லோட்டஸ் வெங்கடாசலம் செட்டியார் பள்ளி மாணவர்கள் சூரிய சக்தியில் இயங்கும் அடுப்பை கண்டுபிடித்துள்ளனர்.
கடும் மின்வெட்டு, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் குறைப்பு, எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் நிலவுகிறது.
இந்நிலையில், லோட்டஸ் வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளி மாணவ, மாணவியர் சூரிய சக்தியில் செயல்படும் அடுப்பை கண்டுபிடித்துள்ளனர்.

மரப்பெட்டியில் கருப்பு வண்ணமிட்ட கண்ணாடித் தட்டும், சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வண்ணம் முகம் பார்க்கும் கண்ணாடியும் மேலே இணைக்கப்பட்டுள்ளது. இந்த அடுப்பை உபயோகித்து, இவர்கள் காய்கறிகளை வேக வைத்தும், தண்ணீரைச் சூடாக்கியும் காட்டினர். உள்ளே பாத்திரங்களை வைக்க இட வசதி உள்ளது. சமைக்க வேண்டிய உணவுப் பொருளை உள்ளே வைத்து மூடி விட வேண்டும். முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரிய ஒளி பிரதிபலிக்கப்பட்டு, அடுப்புக்குள் உள்ள துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரித்து காய்கறிகள் வேக வைக்கப்படுகின்றன.

இந்தக் கண்டுபிடிப்பை, மானாமதுரையில் நவ. 18-ம் தேதி நடைபெறவுள்ள இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளனர்.