Nagaratharonline.com
 
சென்னையில் மார்ச் முதல் மினி பஸ் இயங்கும்?  Nov 12, 12
 
மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களை, பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சென்னையில் மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

முதல் கட்டமாக 100 மினி பஸ்களும், பின்னர் தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் உள்ளன.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளியானதும் அதற்கான ஆய்வுப் பணிகளை போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

சென்னையில் எந்தெந்த வழித் தடங்களில் மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் உள்பட அனைத்து ஆய்வுகளையும் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகாரிகள் முடித்துவிட்டனர்.

சூளைமேடு, அயனாவரம், வேளச்சேரி, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு வழித் தடங்களில் மின் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, 2013 மார்ச் மாதம் முதல் சென்னையில் மின் பஸ்கள் இயங்கும் என தெரிகிறது.