Nagaratharonline.com
 
கோவி​லூ​ரில் நாளை தொல்​காப்​பி​யர் காலக் கருத்​த​ரங்கு  Dec 26, 09
 
சிவ​கங்கை மாவட்​டம் காரைக்​குடி அருகே கோவி​லூ​ரில் செம்​மொ​ழித் தமி​ழாய்வு மத்​திய நிறு​வ​னம் மற்​றும் கோவி​லூர் மடா​ல​யம் ஆகி​ய​வற்​றின் சார்​பில் தொல்​காப்​பி​யர் காலக் கருத்​த​ரங்கு சனிக்​கி​ழமை ​(டிச.26) தொடங்கி 3 நாள்​கள் நடை​பெ​று​கி​றது.​
​ ​ இது​கு​றித்து கருó​த​ரங்​கக அமைப்​பா​ளர் பேரா​சி​ரி​யர் ஆறு.அழ​கப்​பன்,​​ கோவி​லூர் மடா​லய மேலாண்​மை​யா​ளர் மெ.மெ.மெய்​யப்​பன் ஆகி​யோர் கூறி​யது:​ ​
​ தமிழ்ச்​செம் மொழி இலக்​கி​யங்​க​ளில் முதன்​மை​யா​னது தொல்​காப்​பி​யம்.​ காலத்​தால் முற்​பட்​டது.​ திரு​வள்​ளு​வர் காலம்,​​ தமிழ்ப்​புத்​தாண்டு ஆகி​ய​வற்றை அறி​ஞர்​கள் ஆராய்ந்து கண்​ட​தைத் தமி​ழ​க​அ​ரசு ஏற்​றுக்​கொண்டு அவற்​றை​மக்​க​ளுக்கு அறி​வித்​தது.​
​ ​ ஆனால் தொல்​காப்​பி​ய​ரின் காலம் இது​வரை இறு​தி​யான உறுதி செய்​யப்​ப​டா​மல் உள்​ளது.​ உல​கத் தமிழ் செம்​மொழி மாநாடு நடை​பெ​ற​வி​ருக்​கும் இவ்​வே​ளை​யில் தொல்​காப்​பி​யர்​கா​லம் முடிவு செய்​யப்​ப​ட​வேண்​டும் என்ற நோக்​கத்​து​டன் இக்​க​ருத்​த​ரங்கு நடை​பெ​று​கி​றது.​
​ ​ தொடக்​க​வி​ழா​வில்,​​ கோவி​லூர் ஆதீ​னம் நாச்​சி​யப்ப ஞான​தே​சிக சுவா​மி​கள் தலைமை வகித்து தொல்​காப்​பி​யர் படத்​தைத்​தி​றந்து வைக்​கி​றார்.​ கருத்​த​ரங்க திட்ட அறி​முக உரையை செம்​மொழி தமி​ழாய்வு மத்​திய நிறு​வன பொறுப்பு அலு​வ​லர் க.​ ராம​சாமி நிகழ்த்​து​கி​றார்.​
​ ​ முனை​வர் ஆறு.​ அழ​கப்​பன் தொல்​காப்​பி​யர் கால ஆய்​வு​கள் எனும் நூலை அறி​மு​கம் செய்து பேசு​கி​றார்.​ குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார் நூலை வெளி​யிட்டு பேசு​கி​றார்.​
​ ​ டிச.​ 26,​ 27 தேதி​க​ளில் கருத்​த​ரங்க அமர்​வு​கள் நடை​பெ​றும்.​ தஞ்சை தமிழ்ப் பல்​கலை.​ முன்​னாள் துணை​வேந்​தர் இ.​ சுந்​த​ர​ரா​ம​சாமி முதன்மை ஆய்​வுக்​கட்டு ரையை வாசிக்​கி​றார்.​
​ ​ நான்கு கருத்​த​ரங்க அமர்​வு​க​ளி​லும் இளங்​கு​ம​ரன்,​​ ​ ப.​ அரங் கசாமி,​​ வெற்​றி​ய​ழ​கன்,​​ தமி​ழண்​ணல் ஆகி​யோர் தலைமை வகிக்​கின்​ற​னர்.​ 50 அறி​ஞர்​கள் அமர்​வு​க​ளில் பங்​கேற் கிறார்​கள்.​ கருத்​த​ரங்க அமர்​வு​க​ளில் படிக்​கப்​ப​டும் ஆய்​வுக் கட்​டு​ரை​களை தொகுத்​துப்​ப​தி​பிக்​கும் பொறுப்பை பேரா​சி​ரி​யர் தெ.​ சொக்க​லிங்​கம் ஏற்​றுள்​ளார்.​
​ ​ ​ நிறைவு விழா​வில்,​​ அழ​கப்பா பல்​கலை.​ துணை​வேந்​தர் ப.​ ராம​சாமி,​​ முனை​வர் பெருங்​க​விக்கோ வா.மு.​ சேது​ரா​மன் ஆகி​யோர் பங்​கேற்​கின்​ற​னர் என்று அவர்​கள் தெரி​வித்​த​னர்.​ ​

source : Dinamani 26/12/09