Nagaratharonline.com
 
வீடு,வீடாக நிலவேம்பு கஷாயம் : நோய்களை தீர்ப்பதால் மக்கள் ஆர்வம்  Nov 12, 12
 
காரைக்குடி, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆஸ்பத்திரியில், பல நாட்கள் படுத்து சிகிச்சை பெறுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை குடித்தால், நோயை கட்டுப்படுத்தலாம், என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதையடுத்து, காரைக்குடி நகராட்சி பகுதியில், நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. காலை எட்டு மணியிலிருந்து ஒரு மணிவரை பொதுமக்கள் வாங்கி குடித்து சென்றனர். 20 லிட்டர் மட்டுமே காய்ச்சி வழங்கலாம், என முதலில் முடிவு செய்த சித்த மருத்துவர்கள், 3,4,5, 10,15,16வது வார்டு மக்கள் வரத் தொடங்கியதை தொடர்ந்து, 200 லிட்டர் வரை காய்ச்சி வழங்கினர்.மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தின் மீது இருந்த ஆர்வத்தை தொடர்ந்து, இன்று கழனிவாசல்,தெற்கு தெரு பகுதிகளில் விநியோகிக்கப்பட உள்ளது

.காரைக்குடி அரசு சித்த மருத்துவமனை டாக்டர் அழகப்பன் கூறியதாவது: நிலவேம்பு கஷாயத்துக்கு டெங்குவை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதில், நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனதூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் மூலிகைகள் அடங்கியுள்ளன. இவை உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலை குணப்படுத்துகின்றன