Nagaratharonline.com
 
BSNL மறு இணைப்பு மேளா  Nov 10, 12
 
தொலைபேசி மறு இணைப்பு மேளா அனைத்து வாடிக்கையாளர் மையங்களில் நடத்தப்பட உள்ளதாக அதன் பொது மேலாளர் கே.எஸ். வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தொலைபேசி கட்டணம் கட்ட தவறியதாலோ அல்லது வேறு பல காரணங்களால் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலோ மறு இணைப்பு பெற இந்த மேளா நடத்தப்படுகிறது. பாக்கித் தொகையில் பாதி செலுத்தி மீதத்தை தவணை அடிப்படையில் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர் மறு இணைப்புப்பெற வாய்ப்புள்ளது.

துண்டிக்கப்பட்ட நாள் முதல் வாடகைக் கட்டணம் ரத்து உள்ளிட்ட சலுகைகள் மேளாவின்போது வழங்கப்பட உள்ளது.
நவ. 15 திருப்பத்தூரிலும், நவ. 16 சிவகங்கையிலும் இந்த மேளாக்கள் நடத்தப்படுகிறது.
பண்டிகை காலச் சலுகையாக புதிய தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 250 முதல் 750 வரை அமைப்புக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப் படும் என்றார்.