Nagaratharonline.com
 
செயல்படாத தேவகோட்டைபஸ் ஸ்டாண்டில் மின்சாரம் வீண்  Oct 17, 12
 
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் தொடர்ந்து ஏற்பட்ட இடநெருக்கடியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 50 லட்ச ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்த கட்டுமான பணி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. பஸ்களை நிறுத்துவதற்கு வழியில்லாத நிலையில்,பிரம்மாண்டமாக கடைகளை கட்டி ஓரிரு பஸ்கள் மட்டுமே "எளிதாக' நிற்க வழி செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து அதிகாரி ஆய்விற்குப்பிறகு அரசு அனுமதி பெற்று விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழா காணாத நிலையில்,தற்போது இந்த பஸ் ஸ்டாண்ட் பூ மார்க்கெட்டாக மாறியுள்ளது.
மற்றொரு புறத்தில் கட்டப்பட்ட 8 கடைகளை, ஏலம் விட்டதில் பிரச்னை ஏற்பட்டதால், ஐகோர்ட் மறு ஏலம் நடத்த உத்தரவிட்டது. மறு ஏலத்திற்கு ஒரு பிரிவினர் தடை பெற்றுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கடைகளை யாருடைய அனுமதியும் இல்லாமல் சிலர் நடத்தி வருகின்றனர்.

வீணாகும் மின்சாரம்: விரிவாக்க பகுதியில் மட்டும் 27 குழல் விளக்குகள் உள்ளன. மாலை 6 மணிக்கு எரியவிடப்படும் ,விளக்குகள் மறுநாள் காலை 6 மணிக்குத்தான் அணைக்கப்படுகிறது. செயல்படாத பஸ் ஸ்டாண்டில் நாள் முழுவதும் விளக்குகள் எரிவதால் பணம் விரயமாகிறது. சட்டப்படி கடைகளையும், பஸ் ஸ்டாண்டையும், திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : dinamalar