Nagaratharonline.com
 
மானாமதுரை- காரைக்குடி- திருச்சி டெமோ ரயில் மீண்டும் இயக்கம்  Oct 4, 12
 
முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்ட மானாமதுரை- காரைக்குடி- திருச்சி டெமோ ரயில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து புதன்கிழமை காலை 8 மணிக்கு மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து இந்த டெமோ ரயில் வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது.