Nagaratharonline.com
 
அக். 7 காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் விழா போட்டிகள்  Oct 4, 12
 
கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் காரைக்குடியில் அக்டோபர் 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறவிருக்கும் கவியரசர் கண்ணதாசன் விழாவுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பாடல், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.7) காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெறவிருக்கிறது.
காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கும் போட்டிகளில் மழலையர் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் கண்ணதாசனின் பாடல்களில் ஏதேனும் ஒன்றை ஒப்பித்தல் வேண்டும்.
7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கண்ணதாசனும், தேசபக்தியும் என்ற தலைப்பிலும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கண்ணதாசன் பாடல்களில் சமுதாய உணர்வு என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கண்ணதாசன் பார்வையில் தத்துவம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகள் கண்ணதாசன் பாடல்களில் இன்பச்சுவை என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
எங்கள் நெஞ்சில் கண்ணதாசன் எனும் தலைப்பில் கவிதைப் போட்டியும், கண்ணதாசன் சமூகச் சிந்தனையாளன் எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும். கவிதை 48 வரிகளுக்கு மிகாமலும், கட்டுரை 4 பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். பொதுமக்களுக்கு கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடும் போட்டி நடைபெறும்.
மேலும் நடைபெறவுள்ள பாரதி போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பாரதியின் தேசபக்திப் பாடல்களில் ஏதேனும் ஒன்றும், 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாரதியின் பக்திப் பாடல்களில் ஏதேனும் ஒன்றும்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாரதியின் பல்வகைப் பாடல்களில் ஏதேனும் ஒன்றும் ஒப்பித்தல் போட்டி நடைபெறும். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாரதியின் தேசப்பற்று என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாரதி காட்டும் பெண்ணுரிமை என்ற தலைப்பிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும்.
இப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியரின் பட்டியலை வரும் சனிக்கிழக் குள் (அக். 6) கவிஞர் அரு. நாகப்பன், பொதுச் செயலாளர், 16, தேசிக விநாயகர் தெரு, சுப்பிரமணியபுரம் முதல் வீதி (வடக்கு விரிவு) காரைக்குடி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443142113 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.