Nagaratharonline.com
 
"செட்டிநாடு சேலை'களுக்கு "டிரேட் மார்க்' : கிடைக்கிறது சர்வதேச அங்கீகாரம்  Oct 4, 12
 
"செட்டிநாடு காட்டன் சேலை'களுக்கு "டிரேட் மார்க்' கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் வெளிநாடுகளிலும், இவற்றின் விற்பனை பரவும்.

காரைக்குடி, சுற்றுப்பகுதியை சேர்ந்த நகரத்தார் சமூகத்தினரின் வாழ்வோடு ஒன்றியது, கண்டாங்கி சேலை. நாகரிகத்தின் முன்னேற்றத்தால் கண்டாங்கி சேலைகள், "செட்டிநாடு காட்டன் சேலை'களாக மாறியுள்ளன. காரைக்குடி பகுதியில் 450 க்கும் மேற்பட்ட தறிகள், "செட்டிநாடு சேலை' உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. பட்டு, சில்க் காட்டன், சுரிதார் ரகங்களும் நெசவு செய்யப்படுகின்றன. இவற்றை 500 ரூபாய்க்கு வாங்கும் வியாபாரிகள், வெளிச்சந்தையில், 2,000 ரூபாய் வரை, விற்கின்றனர். இதனால் நெசவாளர்களுக்கு பயன் இல்லை. இவற்றின் விற்பனையை பெருக்கவும், லாபத்தில் நெசவாளர்களுக்கு பங்கு கிடைக்கவும், "செட்டிநாடு சேலை' களுக்கு, "டிரேட் மார்க்' கொடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்துள்ளன. கைத்தறித்துறை உயர் அதிகாரிகள் விரைவில், ஆய்வு செய்ய உள்ளனர். "டிரேட் மார்க்' கொடுக்கப்படும் பட்சத்தில், இச்சேலைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்; "ஆன் லைன்' விற்பனைக்கு வழி கிடைக்கும். வியாபாரிகள் தலையீடு இன்றி, நெசவாளர் சங்கங்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய முடியும்; இதற்கான "ராயல்டி' நெசவாளர்களுக்கு கிடைக்கும். சேலைகளுக்கு, சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.

source : dinamalar