Nagaratharonline.com
 
மோசமான ரோட்டால் பாகனேரி பஸ் நிறுத்தம்  Sep 19, 12
 
பாகனேரியிலிருந்து கல்லல் செல்லும் ரோடு பராமரிக்கப்படாததால் பஸ் போக்குவரத்து அடிக்கடி நிறுத்தப்படுகிறது.பாகனேரியிலிருந்து நெற்புகப்பட்டி,முத்தப்பட்டி வழியாக கல்லல் செல்லும் ரோட்டில் 5 கி.மீ தூரத்திற்கு, இரு புறமும் கருவேல மரங்கள் அடர்த்தியாக காணப்படுவதால், இவ்வழியே செல்லும் வாகனங்களின் கண்ணாடி சேதமடைகிறது.இந்த ரோடு போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளதால் அடிக்கடி நிறுத்தப்படுகிறது.பாகனேரி மக்கள் கல்லல், காரைக்குடிக்கு செல்ல பயன் படும் இந்த ரோடு சிதைந்து காணப்படுகிறது.

சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.