Nagaratharonline.com
 
பொன்னமராவதியிலிருந்து கோயம்புத்தூர் : புதிய பேருந்து  Sep 15, 12
 
பொன்னமராவதியிலிருந்து ஆலவயல், நகரப்பட்டி, மணப்பாறை வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய வழித்தட பேருந்து இயக்கத் தொடக்க விழாவிற்கு பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொன்னமராவதி கிளை மேலாளர் எம். சுப்பு முன்னிலை வகித்தார்.
திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.கே. வைரமுத்து புதிய வழித்தட பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.