Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி அரசுப் பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்  Sep 15, 12
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 834 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 11,12-ம் வகுப்புகளில் மட்டும் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், 30 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 15 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

மேல்நிலை வகுப்புகளான 11,12-ம் வகுப்புகளுக்கு 8 ஆசிரியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் தமிழ், உயிரியல் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள்தான் பணிபுரிகின்றனர். கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. பாடமே நடத்தப்படாத நிலையில் காலாண்டுத் தேர்வு தொடங்கியுள்ளது. இதனால் அச்சமுற்ற மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி வட்டாட்சியர் தெய்வானை, காவல் ஆய்வாளர் ச. கருணாகரன், மண்டல துணை வட்டாட்சியர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 4-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளதாக, பள்ளித் தலைமையாசிரியர் பரமசிவம் கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.