Nagaratharonline.com
 
பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்  Sep 12, 12
 
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை தொடங்குகிறது.

2013-ல் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி (திங்கள்கிழமை) வருகிறது. அதற்கு முந்தைய நாள்களான ஜனவரி 12, 13-ம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஜனவரி 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

ரயில்களில் 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், ஜனவரி 11-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.